Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

எதை யாரிடம் நிரூபிக்க முயற்ச்சி செய்கிறாய் ?

                      நம்மை நாம் யாரிடமோ.. நிரூபிக்க நினைக்கிறோம்.. 



அதற்காக முயற்சி செய்கிறோம், அது வேலைக்காவோ! அல்லது வியாபரத்திற்காகவோ! ஏதோ தொழிலுக்காகவோ இருக்கலாம்

நாம் ஏன் நம்மை நிரூபிக்க வேண்டும்?

எந்த கோட்பாட்டின் மையத்தில் சுற்றி வருகிறோம்? நிரூபிக்க நினைக்கும் காரணம் என்ன ? நம் திறமைகள் இங்கே பணமாக்க படுகின்றனவா?

பாராட்ட படுகின்றனவா? பணம், பாராட்டு இவைகள் இல்லையென்றால் இந்த திறமைகள் என்னவாயிருக்கும் ?

ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்தே ஒவ்வொரு செயலும் நகருகிறது அது மனிதனுக்கு பாராட்டு அல்லது பணம் என்ற பலனை எதிர்நோக்கி உள்ளது;

மற்ற உயிர்களுக்கு உணவு என்பதனை தாண்டி வாழ ஓர் இடம் அல்லது கூடு என்பதனை மையமாக கொண்டு நகருகிறது

மனிதனும் இப்படி இருந்து தான் தனது தேவைகளை அதிகமாக்கிக் கொண்டான் என்பது அனைவரும் அறிந்த கதை தான்

இருந்தும் ஏதோ ஒன்று வாழ்வின் தேடுதலாக்க பட்டிருக்கும் நிச்சயம்,

தேடுதல் இல்லாத வாழ்வு என்பது நிச்சயம் அர்த்தம் அற்றது தான்!! தேடுதல் மட்டுமே வாழ்வை முழுமையட செய்யும்

தமது தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருந்தால்அந்த தேவையை பூர்த்தி செய்ய பயன்படும், திறமை உண்மையில் திறமை இல்லை

அதாவது சுயனலம் கொண்டிருக்கும் அறிவு இருந்தும் பலன் இல்லை அது அழிவைத்தரும், பொதுநலன் கொண்ட அறிவு மட்டுமே வாழ்வைத்தரும்

தம்மை தாண்டி தமது அறிவு நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும் பயன்படும் என்றால் அது தான் திறமை அந்த திறமை அனைவருக்கும் வேண்டும் அனைவரும் அதனை வளர்த்து கொள்ள வேண்டும்

நாளை என்பதனை நம்பி நம்பி இத்தனை நாளைகளை கழித்த நாம் நம்மால் அனைவரும் பலன் பெருவர் என்பதனையும் நம்புவோம் நாளை நிச்சயம் நமதாகும்

தனக்கு உணவு கிடைத்தால் போதாது தன்னை சுற்றி இருக்கும் அனைவருக்கும் வேண்டும் என்ற எண்ணம் வந்த போது அங்கு உழைப்பு நிலை கொண்டது...

நம்மை நாம் யாரிடமும் நிரூபிக்க போராட வேண்டாம்

நம்முடைய வேலையில் திறமையின் வெளிப்பாடு  நம்முடைய திருப்திக்காக இருக்க வேண்டும், நீங்கள் செய்வது எந்த வேலையாக இருந்தாலும் அதன் பால் நம் மனம் திருப்தியடைய வேண்டும் அதுவே வெற்றிக்கான பாதை மாத கூலி, தின கூலி, இல்லை தொழில் என எதுவாக  இருந்த போதும், நாம் வேலை செய்வது நமக்காக என்பது தான் உண்மை;

நான் இந்த நிறுவனத்திற்க்காக இப்படி உழைத்தேன், அந்த நிறுவனத்திற்க்காக அப்படி உழைத்தேன்  என்று பலர் கூற கேட்டிருக்கிறேன்; அப்படி அனைவரும் இலகுவாக கூறிவிடலாம் ஆனால் உண்மையில் யாரும் யாருக்காகவும் உழைக்கவில்லை சுய தேவைக்காகவே இயங்குகிறோம் என்பதை நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை தாண்டி நான் முழுமனதோடு பணியாற்றினேன் என்ற நிறைவுக்கு வரும் போது உனக்கான உயற்வும் தானாக வரும்அது முழுக்க முழுக்க அவரவர் தேடலை சார்ந்தது.

வெற்றி தோல்வி என்பதனை கடந்து எவன் ஒருவன் அனுபவத்தை ரசிக்க துவங்குகிறானோ அப்போது அவன் முழு நிலையைடைகிறான்

அதுவே வாழ்வின் மயம் அதுவே ஆக்கம் அதன் பின் எடுக்கும் முடிவுகள் அவனை நிச்சயம் பொருள் சார்ந்து மட்டும் அல்லாது, பொது நலன் சார்ந்து நகர்த்தும் என்பது தான் உண்மை;

அனுபவங்கள் நிச்சயம் அவனை புறம்போடும் நன்கு அவனை பக்குவபடுத்தியிருக்கும்;

அவனுடைய நோக்கத்தை சீரமைக்கும் யாரிடமும் தன்னையோ அல்லது தன் திறமையையோ நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது

மனம் அடங்கி நிற்க்கும், தன்னை வழி நடத்தும் அனுபவத்தை மதிக்க செய்யும், அனுபவங்களுக்கு காரணமான  இயற்கையை போற்றச்செய்யும்;

எதுவும் தனது செயல் இல்லை என்ற நிதர்சனம் புரியும்

இதில் எதை யாரிடம்  நிரூபிக்க ? வேண்டாம் அந்த தேவையும் இல்லை வராது....

எல்லாம் இன்பமயம்; 

 

பிரபஞ்ச பேரொளொயின் கருணை துகளில் இருந்து நான்;

பிரதீஸ்

 

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...